1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (17:42 IST)

சூப்பரான சுவையில் பீன்ஸ் முட்டை பொரியல் செய்ய !!

தேவையான பொருட்கள்:

முட்டை - 3
பீன்ஸ் - 250 கிராம்
பச்சைமிளகாய் - 4
தனி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
வெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்  - 1 டீஸ்பூன்



செய்முறை :

பீன்ஸ், பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் பீன்ஸ் போட்டு வதக்கவும். அடுத்து அதில் தனி மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பீன்ஸ் நன்றாக வெந்தும் அதில் முட்டையை உடைத்து ஊற்றி கைவிடாமல் கிளறி விடவும்.

முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும். சூப்பரான பீன்ஸ் முட்டை பொரியல் தயார்.