1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 16 அக்டோபர் 2015 (13:29 IST)

அசத்தலான சுவையில் இஞ்சி குழம்பு

இஞ்சி குழம்பை இட்லி, தோசை, சாதம் என பல வகை உணவுகளுடன் பரிமாறலாம். வயது வரம்பு இல்லாமல் இதை எல்லோரும் சாப்பிடலாம். குறைந்த நேரத்தில் அசத்த்லான சுவையில் இந்த குழம்பை தயார் செய்துவிடலாம்.

தேவையான பொருட்கள்

* இஞ்சி - 50 கிராம்
* பூண்டு - 50 கிராம்
* வெங்காயம் - 1
* தக்காளி - 1
* பச்சை மிளகாய் - 2
* புளி - சிறிதளவு
* மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
* மிளகு - 1 தேக்கரண்டி
* உப்பு - தேவையான அளவு
* கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை - தாளிக்க
* நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
* நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை

* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளதை போட்டு தாளித்து பூண்டு மற்றும் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

* அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும்.

* இப்பொழுது தோல் சீவி அரைத்து வைத்திருக்கும் இஞ்சி மற்றும் மிளகு கலவையை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

* பின்னர் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

* புளியை 3 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து அதை வதக்கியவற்றுடன் சேர்த்து கொதிக்க விடவும்.

* ஒரு கொதி வந்ததும் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

* மிளகாய் தூள் பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிட்டு எண்ணெய் மேலே வந்ததும் இறக்கி உணவுடன் பரிமாறலாம்.