கருணைக்கிழங்கு சாப்ஸ் செய்வது எவ்வாறு....

Sasikala|
தேவையான பொருட்கள்:
 
கருணைக்கிழங்கு - அரைக்கிலோ
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் -  2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
வறுத்து அரைக்க:
 
சோம்பு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4 
கிராம்பு - 3
பட்டை - 2 துண்டு
 
இதனை லேசாக வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். இத்துடன் ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் சேர்த்து அரைக்கவும்.

 
செய்முறை:
 
சேனைக்கிழங்கை தோல் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். மஞ்சள் தூள், தேவைக்கு ஏற்ப உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். நன்கு வெந்தவுடன் தண்ணீரை வடிக்கட்டவும்.
 
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். கருவேப்பில்லை மற்றும் அரைத்த விழுது சேர்க்கவும். நன்கு பச்சை வாடை போக வதக்கவும். பிறகு வேக வைத்த கிழங்கு சேர்த்து பிரட்டவும்.
 
கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து பிரட்டி சிம்மில் வைத்து மசாலா கிழங்கில் ஒட்டும் வரை மூடி வைக்கவும். நறுக்கிய மல்லி இலை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.


இதில் மேலும் படிக்கவும் :