வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

முருங்கை கீரை துவையல் செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
முருங்கை கீரை - 2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
வர மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
தேங்காய் - 1/4 கப் துருவியது

செய்முறை:
 
கடாயில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மற்றும் துவரம்பருப்பு முதலிய பொருட்களைச் சேர்த்து வறுக்கவும். பின் இத்தோடு வரமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை மற்றும் தேங்காய் முதலியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
 
இவற்றைத் தனியாக எடுத்து வைத்து விடவும். தற்போது கடாயில் எண்ணெய்யை ஊற்றி முருங்கை கீரையைப் போட்டு நன்கு வதக்கவும். பின் வறுத்து வைத்த  பொருட்கள் மற்றும் வதக்கிய முருங்கை கீரையை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். தற்போது சுவையான ஆரோக்கியம் நிறைந்த முருங்கை கீரை  துவையல் தயார்.