வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

பச்சை பட்டாணி புலாவ் செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
பாஸ்மதி அரிசி - 150 கிராம்
பச்சை பட்டாணி - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
நெய் - 2 மேஜைக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 2
தேங்காய் பால் - 1 கப்
பாஸ்மதி அரிசியை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்து 400 மில்லி அளவுக்கு பால் எடுத்து வைக்கவும். 
 
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போடவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய்  போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் பச்சை பட்டாணி  சேர்த்து கிளறவும். 
 
பிறகு அதனுடன் தேங்காய் பால், உப்பு சேர்க்கவும். தேங்காய் பால் கொதிக்க ஆரம்பித்ததும் அதனுடன் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து  நன்றாக கலக்கி மூடி வெயிட் போட்டு 2 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். வேகவிடவும். ஆவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக  கிளறி விடவும். சுவையான பட்டாணி புலாவ் தயார்.