ஆரோக்கியமான நெல்லிக்காய் ரசம் எப்படி செய்வது...!!

தேவையான பொருள்கள்:
 
நெல்லிக்காய் - 1 கப்
மிளகு - 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
தனியா - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - சிறிதளவு
சீரகம் - அரை ஸ்பூன்
பெருங்காயம் - அரை ஸ்பூன்
புளி - எலுமிச்சையளவு
கடுகு - அரை ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
 
நெல்லிக்காயை கழுவி விட்டு கொட்டையோடு அதனோடு மிளகாய் வற்றல், தனியா, சீரகம், மிளகு, பெருங்காயம், புளி ஆகியவற்றை சேர்த்து  கரகரப்பாக அரைக்கவும்.
 
2 இதை 6 குவளை தண்ணீரில் கரைத்து தேவையான அளவு உப்பு, சிறிது மஞ்சள் பொடி கலக்கவும். 3 எண்ணெய் காய விட்டு கடுகு,  கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
மருத்துவ குணங்கள்:
 
* நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி , ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. வயிற்றுப்போக்கு, நீரிழிவு போன்றவற்றைக்  குறைக்கும்.
* பித்தத்தை குறைக்கும். கண் பார்வையை தெளிவாக்கும்.
* இரத்தத்தை தூய்மையாக்கும், மூலம், மலச்சிக்கல், வாய்வு, இருமல், சளி, வாந்தி மஞ்சள் காமாலை மற்றும் தோல் சம்பந்தப்பட்ட  நோய்களை குறைக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :