செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

வீட்டிலேயே சாட் மசாலா பொடியை செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்: 
 
சீரகம் - கால் கப்
தனியா (கொத்தமல்லி விதை) - கால் கப்
அம்சூர் பவுடர் (மாங்காய்த் தூள்) - கால் கப் 
மிளகு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - அரை கப்
கருப்பு உப்பு - ஒரு டீஸ்பூன்
ஏலக்காய், லவங்கம் - தலா 5
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
 
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் வெயிலில் நன்கு காயவைத்து, அதனை  ஒரு கடாயில் லேசான தனலில் வறுத்து நன்கு ஆறவைத்து  நைஸாக அரைத்து எடுத்தால், சாட் மசாலா பொடி தயார்.

இதனை சாட் வகை உணவுகள் தயாரிக்கும் போது பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் சிறிதளவு பெருத்தூள் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.