ருசியான மீல் மேக்கர் கோலா உருண்டை செய்ய !!
தேவையான பொருட்கள்:
மீல் மேக்கர் - 200 கிராம்
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 4
மல்லித்தழை - சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
கார்ன் பிளவுர் மாவு - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க :பச்சைமிளகாய் - 3
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 5 பல்
பட்டை - 1 துண்டு
லவங்கம் - 2
முந்திரிப்பருப்பு - 4
சோம்பு - அரை டீஸ்பூன்
செய்முறை
மீல் மேக்கரை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு, இறக்கி வடிகட்டி மீண்டும் இருமுறை பச்சை தண்ணீரில் போட்டு நன்கு அலசிப் பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பொட்டுக்கடலையை பொடி செய்யுங்கள். வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்குங்கள். மீதி 2 பச்சை மிளகாயுடன் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைஸாக , கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள். மீல் மேக்கர் துண்டுகளை மிக்சியில் போட்டு, அடித்து உதிர்த்துக்கொள்ளுங்கள்.
இப்போது எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து காயும் எண்ணெய்யில் சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு வேகவிட்டு எடுங்கள். இப்போது சூடான வாய்க்கு ருசியான மீல் மேக்கர் கோலா உருண்டை தயார்.