வியாழன், 14 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

பச்சை பயறு குழம்பு செய்ய.....

தேவையான பொருட்கள்: 
 
பச்சை பயறு - 1 கப் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
தக்காளி - 2 (நறுக்கியது)
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 5 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1 டீஸ்பூன் 
சீரகம் - 1 டீஸ்பூன் 
எண்ணெய் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
கொத்தமல்லி - சிறிது

 
செய்முறை: 
 
முதலில் பச்சை பயறை குக்கரில் போட்டு, பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர்  ஊற்றி, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பின்பு அதில் சீரகத்தைப் போட்டு தாளித்து,  வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பிறகு அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பையும் சேர்த்து,  தேவையான அளவு உப்பு தூவி, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால் பச்சை பயறு குழம்பு ரெடி.  சுவை அற்புதமாக இருக்கும். சமைத்து பாருங்கள்.