வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய் சாதம் செய்ய...!

தேவையான பொருட்கள்:
 
சாதம் - 2 கோப்பை அளவு
பெரிய நெல்லிக்காய் - 6
வர மிளகாய் - 5
கறிவேப்பிலை - 2 கொத்து
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
நெய் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
 
சாதத்தை வத்து தனியாக ஒரு தட்டில் ஆறவைத்துக் கொள்ளவேண்டும். பெரிய நெல்லிக்காயை கழுவி கொட்டையை நீக்கி பிறகு பொடியாகத் துருவிக்  கொள்ள வேண்டும்.
 
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகை, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு பிறகு கறிவேப்பிலை, வற்றல் மிளகாய், பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு தாளிக்க வேண்டும். அதனுடன் துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளற வேண்டும். சிறிது நேரம் வதங்கியவுடன் அடுப்பிலிருந்து  இறக்கவேண்டும். அடுப்பிலிருந்து இறக்கிய நெல்லிக்காய் கலைவையை ஆற வைத்த சாதத்துடன் சோ்த்து கிளற வேண்டும். 
 
சிறிது நெய் விட்டு அதில் பொட்டுக் கடலையை போட்டு பொன்னிறமாக வறுத்து கிளறிய சாதத்துடன் சேர்க்கவேண்டும். தேவைப்பட்டால் பொட்டுக் கடலையுடன், முந்திரி, நிலக்கடலை ஆகியவற்றை நெய்யில் வறுத்து சேர்க்கலாம். சுவையோ சூப்பராக இருக்கும்.