திங்கள், 25 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

சாமை அரிசி பிரியாணி எப்படி செய்வது....?

தேவையான பொருட்கள்:  
 
சாமை அரிசி - ஒரு கப் 
பூண்டு - 4 பல் 
இஞ்சி - ஒரு சிறிய துண்டு 
பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை - தலா 1 
லவங்கம் - 3 
கேரட், உருளைக் கிழங்கு, பீன்ஸ் - 2 கப் 
பச்சைப் பட்டாணி - கால் கப் 
மிளகாய்த் தூள் - கால் டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை 
எண்ணெய் - ஒரு டீஸ்பூன் 
நெய் - ஒரு டீஸ்பூன் 
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
முந்திரி - 5 
பெரிய வெங்காயம் - 1
உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர் - 3 கப் 
தக்காளி - 1 
தயிர் - சிறிதளவு
எலுமிச்சைப் பழம் - பாதி 
உப்பு - தேவையான அளவு
செய்முறை: 
 
வெங்காயம், தக்காளி, புதினா, காய்கறிகள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சாமை அரிசியைக் கழுவி ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய்  ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து  வதக்கவும்.
 
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் காய்கறிகள், பச்சைப் பட்டாணியைச் சேர்த்துக் கிளறவும். அடுத்து தயிர்,  மிளகாய்த் தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். பின்னர் மூன்று கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். 
 
கொதி வந்தவுடன் ஊறவைத்த சாமை அரிசியைச் சேர்த்து, மிதமான சூட்டில் வேகவைக்கவும். அரிசி முக்கால் பாகம் வெந்தவுடன் நறுக்கிய புதினா, கொத்தமல்லி சேர்த்து, நெய் விட்டு, முந்திரியைத் தூவி ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும். கடைசியாக எலுமிச்சைச் சாற்றை ஊற்றி, நன்றாகக் கிளறிப்  பரிமாறவும்.