1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

கொள்ளு சட்னி செய்ய வேண்டுமா...!

தேவையான பொருட்கள்:
 
கொள்ளு  - 1  கப்
வெங்காயம்  - 2
தக்காளி - 1
பூண்டு - 6 பல்லு
சீரகம் - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
புளி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

 
செய்முறை:
 
கொள்ளு, நறுக்கிய தக்காளி  இரண்டையும் சேர்த்து வேக வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய  வெங்காயம், சீரகம், தனியா, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
 
வெங்காயம் வதங்கியவுடன் வேகவைத்த கொள்ளு, தக்காளியுடன் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும். பின்னர்  இதனுடன் ஊற வைத்த புளி, உப்பு சேர்த்து அரைத்து எடுத்து மல்லி தழை தூவி பரிமாறவும்.
 
குறிப்பு: சட்னி அரைக்கும் போது கொள்ளு வேக வைத்த நீரை பயன்படுத்தவும். அரைக்கும் போது 5 நறுக்கிய சின்ன  வெங்காயத்தை பச்சையாக சேர்த்து அரைத்தால் நன்றாக இருக்கும். சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.