1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

கேரட் புதினா புலாவ் செய்ய வேண்டுமா.....?

தேவையான பொருட்கள்:
 
புதினா - ஒரு கட்டு
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
கேரட் - 3
பெரிய வெங்காயம் - 2
பட்டை - சிறு துண்டு
லவங்கம் - 3
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

 
செய்முறை:
 
புதினா இலைகளைச் சுத்தம் செய்து, அதனுடன் சின்ன வெங்காயம், சீரகம், பட்டை, லவங்கம் சேர்த்து அரைத்து வைக்கவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். வெங்காயம் மெல்லியதாக நறுக்கி வைக்கவும். அரிசியை ஊறவைக்கவும்.
 
வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். பிறகு கேரட்டை போட்டு வதக்கவும்.
 
கேரட் வதங்கியதும் அரைத்த புதினாவைப் போட்டு வதக்கவும். அதனுடன் ஊற வைத்த பாசுமதி அரிசியைப் போட்டு வதக்கி, 2 கப் தண்ணீர் ஊற்றி கலந்துவிடவும். பிறகு உப்பு சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு குறைந்த தீயில் 10 நிமிடங்கள் மூடி வைத்து வேகவிடவும். தண்ணீர் வற்றியதும் குறைந்த தனலில் 5 நிமிடங்கள் தம்மில் போடவும். சுவையான கேரட் புதினா புலாவ் தயார்.