பிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா செய்ய...!

Sasikala|
தேவையான பொருட்கள்:
 
கத்தரிக்காய் - 10
புளி - நெல்லிக்காய் அளவு
வெல்லம் - சிறிய துண்டு
கடலை எண்ணெய் - 3 மேஜை கரண்டி
மிளகு - 10
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கையளவு
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
 
பொடிக்க வேண்டியவை:
 
வேர்க்கடலை - 2 மேஜைக்கரண்டி
எள் - 1 மேஜைக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி

 
செய்முறை:
 
பொடிக்க வேண்டிய பொருட்களை லேசாக வறுத்து ஆற வைத்து பொடித்து கொள்ளவும்.
 
கத்தரிக்காய்களை நான்காக வெட்டவும். காம்பு பக்கம் வெட்டாமல் அதனுடைய எதிர் பக்கம் வெட்டவும். இப்படி வெட்டினால்  கத்தரிக்காய் உடையாமல் இருக்கும்.
 
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மிளகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளித்து இஞ்சி, பூண்டு  விழுதுசேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் தக்காளி, மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, கத்தரிக்காய்களை போட வேண்டும். பின் தண்ணீர் ஊற்றி வெந்தவுடன், பொடித்து வைத்துள்ள பொடியினை கத்தரிக்காயில் சேர்த்து கலந்து விடவும். தேவையான அளவு  உப்பு போடவும்.
 
பின்னர் சிறிய தீயில் வைத்து, எண்ணெய் தனியாக பிரிந்து வருவதே சரியான பதம் ஆகும். பிறகு சிறிய துண்டு வெல்லம்  சேர்த்து கிளறிவிடவும்.


இதில் மேலும் படிக்கவும் :