1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

பேபி கார்ன் பஜ்ஜி

பேபி கார்ன் பஜ்ஜி

தேவையானவை: 
 
பேபி கார்ன் - 6
கடலை மாவு
அரிசி மாவு - தலா அரை கப்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
ஆப்ப சோடா மாவு - ஒரு சிட்டிகை


 
 
செய்முறை: 
 
பேபி கார்னை நீளவாக்கில் நறுக்கி தனியே வைக்கவும். 
 
எண்ணெய் தவிர, மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். 
 
காடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய பேபி கார்னை மாவில் தோய்த்து எண்ணெயில் பொன்னிறமாக வேகவிட்டு, பொரித்து எடுக்கவும்.
 
இதேபோல் வாழைக்காய், கத்திரிக்காய், குடமிளகாய், உருளைக்கிழங்கு, வெங்காயம், ஆப்பிள், பிரட், போன்றவற்றிலும் பஜ்ஜி செய்யலாம்.
 
இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி நல்ல காம்பினேஷன் (அல்லது) தக்காளி சாஸ் சூப்பராக இருக்கும்.