வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. பட்ஜெட் 2018
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜனவரி 2018 (20:16 IST)

பட்ஜெட் 2018-19: பெண்கள் எதிர்ப்பார்ப்பது என்ன?

2018-19 ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. 2019 பொதுத்தேர்தலுக்கு முன்னர் நடக்கும் கடைசி பட்ஜெட் தாக்கல் என்பதால் மத்திய அரசு இதனை மிகவும் கவனத்துடன் கையாளும்.
 
இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் பெண்களின் எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்கும் என்பதை இங்கு காண்போம்... ஜிஎஸ்டி அறிமுகமான பின்னர் அத்தியாவசிய பொருட்கள் மீது அதிக வரி, அழுக சாதன பொருட்கள் மற்றும் ஆடம்பர பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரி குறைக்கப்பட வேண்டும் என எதிர்ப்பார்க்கலாம்.
 
இதை தவிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக பெண்கள் முன் வைத்து வரும் ஒரு விஷயம் சானிடரி நாப்கினுக்கு விதிக்கப்பட்டுள்ள 12% வரி. சானிடரி நாப்கின் மீதான வரியை குறைக்க வேண்டும் என பெண்கள் பல முறைகளில் மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வைத்துள்ளனர். 
 
இதே போன்று பெண்களின் பாதுகாப்புக்காக நிர்பயா கொலையை தொடர்ந்து நிதி அறிவிக்கப்பட்ட நிலையிலும், பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து நடந்து வருவதால், பொது இடங்களில் மேலும் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க நிர்பயா தொண்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் எதிர்ப்பார்க்கின்றனர்.