புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வியாழன், 24 ஜனவரி 2019 (22:58 IST)

பிரியங்கா காந்தி வருகைக்கு கொல்கத்தா பேரணிதான் காரணமா?

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் திடீரென காங்கிரஸ் கட்சி நேற்று பிரியங்கா காந்தியை களமிறக்கியுள்ளது. இவருடைய வருகையை பலர் குறிப்பிடும்போது மாயாவதி மற்றும் அகிலேஷ் கட்சிகளின் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்த்து கொள்ளாததால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கவே பிரியங்காவை அறிமுகம் செய்துள்ளதாக கணித்துள்ளனர்.
 
ஆனால் உண்மை நிலவரம் வேறு என்று கூறப்படுகிறது. சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் பேரணியில் கலந்து கொண்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒருவர் கூட ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறவில்லை. கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது 'ராகுல்காந்திதான் பிரதமர் என முழங்கிய ஸ்டாலின் கூட கொல்கத்தா கூட்டதில் பிரதமர் வேட்பாளர் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை
 
எனவே ராகுல்காந்திக்கு பதிலாக பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராக திடீரென அறிவித்தால் மூன்றாவது அணியில் உள்ள பலரது பார்வை காங்கிரஸ் பக்கம் திரும்பும் என்றே காங்கிரஸ் மேலிடம் நினைத்துள்ளதாக கூறப்படுகிறது. ராகுல்காந்தியின் இந்த அதிரடி அறிவிப்பு காங்கிரஸ் கட்சிக்கு பலத்தை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்