புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By VM
Last Modified: சனி, 15 டிசம்பர் 2018 (19:10 IST)

வெளியானது வேட்டிக்கட்டு : பட்டாசு போல் கமெண்டுகளை வெடித்து கொண்டாடும் தல பேன்ஸ்!

விஸ்வாசம் படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் வேட்டிக்கட்டு வெளியாகி உள்ளது.


 
நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுடன் தல அஜித் இணைந்து நடித்துள்ள படம் விஸ்வாசம். இதில்  அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஒவ்வொரு அப்பேட்டையும் அஜித் ரசிகர்கள் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் முதல் சிங்கிள் டிராக் அடிச்சு தூக்கு பட்டய கிளப்பி வருகிறது.
 
இந்நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் இரண்டாவது சிங்கிள் டிராகக் வேட்டிக்கட்டு பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே டிரெண்டிங் ஆகி வருகிறது.
 
தல ரசிகர்கள் பேஸ்புக், யூடியூப் மற்றும் டுவிட்டரில் பட்டாசு போல் கமெண்டுகளை வெடித்து  கொண்டாடி வருகிறார்கள்.