ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : சனி, 16 ஜூன் 2018 (15:11 IST)

'பிக்பாஸ் 2' போட்டியாளர்கள்: படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த தகவல்

விஜய் டிவியில் நாளை முதல் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை ஒளிபரப்பாகவுள்ள முதல் நாள் நிகழ்ச்சிக்குரிய படப்பிடிப்பு இன்று சென்னை அருகே உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்கள் கொடுத்த தகவலின்படி இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் இவர்கள் தான் என்று கூறப்படுகிறது. இதோ பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள்:
 
1. தாடி பாலாஜி
2. தாடி பாலாஜியின் மனைவி நித்யா 
3. நடிகை ஜனனி ஐயர்
4. நடிகையாஷிகா ஆனந்த்
5. நடிகை மும்தாஜ் 
6. கவின்
7, நடிகர் பொன்னம்பலம்
8. நடிகர் செண்ட்ராயன்  
9. மமதா சாரி
10. டேனி
11. நடிகர் மகத்
12. அனந்த் வைத்தியநாதன்
13. நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன்
14. ஐஸ்வர்யா தத்தா
 
மேலும் மேற்கண்ட 14 பேர்களுடன் இன்னும் இரண்டு பிரபலங்கள் இணையவுள்ளதாகவும், அதன் பின்னர் நிகழ்ச்சியின் நடுவே சில நாட்கள் கழித்து மேலும் இரண்டு பேர்கள் பிக்பாஸ் வீட்டில் நுழையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.