1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : திங்கள், 5 நவம்பர் 2018 (15:24 IST)

விஜய்யை கடுமையாக விமர்சித்த தமிழிசை!

கள்ளக்கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றி படம் எடுப்பதாக நடிகர் விஜய்யை, பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
இதுத்தொடர்பாக தமிழிசை  கூறுகையில்,
 
'முதல்வர் கனவோடு நடிப்பவர்கள் திரையில் தான் ஆட்சி செய்ய முடியும்; கள்ளக்கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றி படம் எடுக்கின்றனர். 
 
சினிமாவிலேயே நேர்மையாக இல்லாதவர்கள் அரசியலில் எப்படி நேர்மையாக இருப்பார்கள். அரசியலில் நேர்மையாக இருப்போம் என சொல்பவர்கள் முதலில் சினிமாவில் நேர்மையாக இருக்கட்டும்.
 
மறைமுகமாக அரசியல் நடக்கும் இக்காலத்தில், பாஜக நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்கிறது. பாஜக ஆட்சி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான  ஆட்சி அல்ல, காமன்மேன்க்கான ஆட்சி' என்றார்.