1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 5 நவம்பர் 2018 (11:01 IST)

சர்கார் விவகாரத்தால் மீண்டும் அதிரடி முடிவெடுத்த பாக்யராஜ்

பாக்யராஜின் ராஜினாமா நிராகரிக்கப்பட்டதால் மீண்டும் தனது ராஜினாமா கடிதத்தை சங்கத்திற்கு அனுப்பியிருக்கிறார்.
சர்க்கார் பட விவகாரத்தில் ஞாயத்தின் பக்கம் நின்று கதை திருட்டு விவகாரத்தை வெளியே கொண்டு வந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் சர்கார் கதை விவகாரத்தில் ஈடுபட்டதால் தான் தனிப்பட்ட முறையில் பல அசௌகர்யங்களுக்கு ஆளானதால் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் சங்க நிர்வாகிகள் அவரின் ராஜினாமாவை ஏற்க மறுத்துவிட்டனர்.
 
இந்நிலையில் தனது முடிவிலிருந்து மாறாத பாக்யராஜ் மீண்டும் 2வது முறையாக தனது ராஜினாமா கடிதத்தை சங்கத்திற்கு அனுப்பியுள்ளார். இதனால் சங்க நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.