1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: புதன், 10 அக்டோபர் 2018 (21:42 IST)

சின்மயியை கலாய்த்த சுபவீரபாண்டியன்: வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

பாடகி சின்மயி தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்தும் தனக்கு வேண்டியவர்களுக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகள் குறித்தும் ஒருசில மணி நேரங்களுக்கு ஒருமுறை தனது டுவிட்டரில் பதிவு செய்து வருவதால் டுவிட்டர் இணையதளமே பெரும் பரபரப்பில் உள்ளது. குறிப்பாக கவியரசர் வைரமுத்து மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டு கோலிவுட் திரையுலகையே அதிரவைத்துள்ளது.

இந்த நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாலியல் தொல்லை நடந்து 14 வருடங்கள் கழித்து கூறுவதன் காரணம் என்ன? சின்மயி வெறும் விளம்பரத்திற்காக இவ்வாறு குற்றஞ்சாட்டுவதாகவும் ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் இதுகுறித்து சுப.வீரபாண்டியன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு ஜோக்கை பதிவு செய்து சின்மயியை மறைமுகமாக கலாய்த்துள்ளார். அந்த ஜோக் இதுதான்

"இன்ஸ்பெக்டர், ஒரு பாலியல் புகார் குடுக்க வந்திருக்கேன்"
"தப்பு நடந்து 14 வருஷம் ஆயிடுச்சா?"

சுப.வீரபாண்டியன் பதிவு செய்த இந்த ஜோக்குக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதே குற்றச்சாட்டு பாஜக பிரமுகர் யார் மீதாவது இருந்திருந்தால் சுப.வீரபாண்டியனின் அணுகுமுறையே வேறு விதமாக இருக்கும் என்றும், அதே புகார் உங்க வீட்ல இருக்கும் ஒரு பொண்ணா இருந்தா இதே போல்தான் நக்கல் அடிப்பிங்களா. தப்பு எப்ப நடந்தாலும் தப்புதான்...ஆனா உங்க திராவிட கணக்கு' என்றும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நெட்டிசன்களின் கடும் கண்டனங்களை அடுத்து சுப,வீரபாண்டியன் தனது சர்ச்சைக்குரிய டுவீட்டை டெலிட் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.