1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 10 அக்டோபர் 2018 (15:58 IST)

வைரமுத்து அவர்களே! இந்த டிரிக்கை வேற எங்கயாவது யூஸ் பண்ணுங்கள்: பெண் பத்திரிகையாளர்

வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தாலும் ஒரு சில ஊடகங்கள் இந்த விஷயத்தை கண்டுகொள்ளவே இல்லை. சோபிகா, எஸ்.வி.சேகர் விவகாரங்களுக்கு உடனடியாக குரல் கொடுத்த பல அரசியல்வாதிகள் இந்த விஷயத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதை மக்கள் கவனித்து கொண்டுதான் உள்ளனர்.

இந்த நிலையில் மிகவும் புத்திசாலித்தனமான வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு சில நிமிடங்களுக்கு முன் பதிலளித்திருந்தார். அதில் தான் ஒரு பிரபலம் என்பதால் தன்மீது அநாகரீகமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று கூறியுள்ளார்.

 
ஆனால் இதில் ஒன்றை அவர் மறந்துவிட்டதாக பிரபல பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் கூறியுள்ளார். அவர் தனது டுவிட்டரில், 'உங்கள் மீது குற்றச்சாட்டு கூறியவரும் ஒரு பிரபலம் தான் என்றும் அதனை நீங்கள் மறந்துவீட்டீர்கள் என்றும் வைரமுத்து அவர்களே, இந்த டிரிக்கை எல்லாம வேற எங்கயாவது யூஸ் பண்ணுங்க' என்றும் கூறியுள்ளார்.