திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: திங்கள், 3 செப்டம்பர் 2018 (20:38 IST)

தமிழிசை மீது சோபியா தந்தை கொலை மிரட்டல் புகார்: பெரும் பரபரப்பு

சென்னையில் இருந்து தூத்துகுடி சென்ற விமானத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திராஜனுக்கும் சோபியா என்ற இளம்பெண்ணுக்கும் நடுவானில் வாக்குவாதம் நடந்ததோடு அந்த வாக்குவாதம் தூத்துகுடி விமான நிலையம் வரை நீடித்தது. தமிழிசையை பார்த்தவுடன் பாஸிச பாஜக ஒழிக என சோபியா கத்தியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த தமிழிசை அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் தமிழிசை செளந்திரராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சோபியா மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் சோபியா விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது

இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் தமிழிசை செளந்திராஜன் உட்பட 10 பேர் கொலை மிரட்டல் விடுத்ததாக சோபியாவின் தந்தை சாமி என்பவர் காவல் நிலையத்தில் புகார். அளித்துள்ளார். சோபியாவின் தந்தை புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் மாறி மாறி புகார் கொடுத்துள்ளதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது