திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 3 செப்டம்பர் 2018 (19:35 IST)

விமானத்தில் தமிழிசையுடன் மோதிய பெண் மீது வழக்கு

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சென்னையிலிருது தூத்துக்குடி செல்லும் விமானத்தில் இன்று பயணம் செய்தபோது சோபியா என்ற பெண் பாஜக ஒழிக என கோஷமிட்டார் என்பதையும் இதனை அடுத்து,  தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்பதையும், இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பை ஏற்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சோபியா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அவர் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், தேவைப்பட்டால் அவரை விசாரணைக்கு அழைக்க முடிவு செய்துள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழிசையுடன் வாக்குவாதம் செய்த சோபியா என்ற இளம்பெண் கனடா நாட்டில் படித்து வருவதாகவும், விடுமுறைக்காக அவர் இந்தியா வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.