மே 17ஆம் தேதி நயன்தாராவின் அடுத்த ரிலீஸ்…

CM| Last Modified வெள்ளி, 11 மே 2018 (11:07 IST)
மே 17ஆம் தேதி நயன்தாராவின் பாடல் ஒன்று வெளியாக இருக்கிறது. 
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கோலமாவு கோகிலா’, சுருக்கமாக ‘கோகோ’. ஹீரோயினை முன்னிலைப்படுத்திய இந்தப் படத்தில், நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின் ஆகியோர் முக்கிய வேடங்களில்  நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் இருந்து ‘எதுவரையோ…’ என முதல் பாடல் ஏற்கெனவே ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில், மே 17ஆம் தேதி இரண்டாவது லிரிக்கல் வீடியோவை ரிலீஸ் செய்யப் போவதாக அனிருத் அறிவித்துள்ளார். ‘கல்யாண வயசு’ என்று தொடங்கும் இந்தப் பாடலை எழுதியவர், முதன்முதலாக  இப்போதுதான் பாடல் எழுதுகிறார். அவர் யார் எனத் தெரியுமா? என்று கேட்டுள்ளார் அனிருத்.
 
ஒருவேளை அனிருத்தே எழுதியிருப்பாரோ..?


இதில் மேலும் படிக்கவும் :