பிரிந்தவர்கள் மீண்டும் வந்தால் பதவி உறுதி: ஆசை காட்டும் அமைச்சர்

rajendra balaji
Last Modified வியாழன், 13 டிசம்பர் 2018 (22:09 IST)
அதிமுகவில் இருந்து பிரிந்து தினகரன் பக்கம் சென்றவர்கள் எம்.எல்.ஏ பதவி இழந்ததோடு முக்கியத்துவம் இல்லா தலைவர்களாகிவிட்டதால் அனைவரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே வெகுவிரைவில் தினகரன் கூடாரம் காலியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பிள்ளையார் சுழியாக செந்தில்பாலாஜி, திமுகவில் சேரவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தினகரனை தவிர அனைவரையும் மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ள தயாராக இருப்பதாக இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதால் மிக விரைவில் தினகரனின் அமமுகவில் உள்ளவர்கள் அதிமுகவில் இணைவார்கள் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்தால் அவர்களின் செயல்பாட்டிற்கு ஏற்ப உரிய பதவியை ஈபிஎஸ்-ஓபிஎஸ் வழங்குவார்கள் என்று ஆசை காட்டியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :