1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Jignesh Mewani twwets against BJP

ஏதேச்சாதிகார பாஜகவிற்கு எதிராக ஒன்று கூடுவோம்: ஜிக்னேஷ் மேவானி!

பாஜக
தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று முன்தினம் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 11 பேர் பலியாகிய நிலையில் நேற்றும் இரண்டாவது நாளாக துப்பாக்கி சூடு நடந்தது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில் இந்த கொடூரம் குறித்து தற்போது குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கருத்து தெரிவித்துள்ளார். குஜராத்தின் வட்காம் தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தனித்து போட்டியிட்டு ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றார். 
 
நேற்று கர்நாடக முதல்வராக பதவியேற்ற குமாரசாமியின் விழா குறித்து டிவிட்டரில் பதிவிட்டார். அவரது பதிவு பின்வருமாறு, குமாரசுவாமி அவர்களின் பதவியேற்பு விழாவில் ஏதேச்சாதிகார பாஜகவிற்கு எதிராக ஒன்று கூடிய அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிசூட்டில் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது போராட்டத்தில் பங்கு கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 
அடுத்த கட்டுரையில்
இது எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி - எடப்பாடி விளக்கம்