செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : புதன், 14 மார்ச் 2018 (18:23 IST)

பதிவு திருமணம் செய்ய பெற்றோர் அனுமதி வேண்டும்; உரிமையை பறிக்கும் ரகசிய சுற்றறிக்கை

பதிவு திருமணம் செய்பவர்கள் தங்களது பெற்றோர்களின் அடையாள அட்டையை சமர்பிக்க வேண்டும் என்று பதிவுத்துறை ரகசிய சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.

 
பதிவுத்துறை இயக்குநர் அனைத்து அலுவலங்களுக்கு ரகசிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், இருவர் திருமனம் செய்துக் கொள்ள அவர்கள் பெற்றோர்களின் அடையாள அட்டையை சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதாவது பெற்றோர் அடையாள அட்டை சமர்பித்தால். அடையாள சரிபார்க்க பெற்றோர்கள் பதிவு திருமணம் அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும். இதன்படி இனி பெற்றோர் அனுமதி இருந்தால் மட்டுமே பதிவு திருமணம் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்பு திருமன வயது நிரம்பியவர்கள் பெற்றோர்கள் தம்பந்தமின்றி திருமணம் செய்துக்கொள்ளலாம். திருமணம் செய்பவர்களின் அடையாள அட்டை மற்றும் சாட்சி கையெழுத்து போடுவர்களின் அடையாள அட்டை இருந்தால் போது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள விதி திருமண உரிமைக்கு எதிரானது.
 
இதனால் சாதி மறுப்பு திருமணம் முற்றிலும் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.