வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 22 பிப்ரவரி 2018 (12:07 IST)

பெற்றோர் எதிர்ப்பு - விஷம் குடித்து தற்கொலை செய்த காதலர்கள்

பெற்றோர் காதலுக்கு சம்மதிக்காததால் காதலர்கள் ஒரே நேரத்தில் செல்போனில்  பேசிக் கொண்டே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று வேலூரில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
வேலூர் மாவட்டம் அச்சமங்களம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கார்த்திக், பாரதி. இருவேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரின் பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் பாரதிக்கு அண்மையில் திருமண நிச்சயம் நடைபெற்ற நிலையில், தங்கள் காதல் கைக்கூடாது என மனமுடைந்து போன இருவரும் தங்களின் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்தனர்.
 
இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் எந்த அசம்பாவித சம்பவங்கள் நிகழாதிருக்கும் வகையில், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.