1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: புதன், 2 மே 2018 (13:11 IST)

150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி இல்லை - முதலமைச்சர் மகிழ்ச்சி

உத்திர பிரதேசதில் 10,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்வில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாதது நல்ல முன்னேற்றம் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார். 
 
கடந்தாண்டு உ.பியில் பொதுத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அதனைத் தடுக்க இந்த ஆண்டு தேர்வு எழுதும் மையங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் சிறப்புப் படையினரை நியமித்து, முறைகேடுளை குறைத்ததாகவும் தெரிவித்தார். 
யோகியின் இந்த அதிரடி நடவடிக்கையால், உ.பியில் கடந்தாண்டு 10 ஆம் வகுப்பில் 81.2 ஆக இருந்த தேர்ச்சி விகிதம், தற்பொழுது 75.16 ஆக குறைந்துள்ளது.