பாம்புகளால் தடைப்பட்ட படப்பிடிப்பு; வைரலாகும் வீடியோ
முன்னாள் காதலர்களான மாதுரி தீக்ஷித், சஞ்சய் தத், வருண் தவான், ஆலியா பட், சோனாக்ஷி சின்ஹா, ஆதித்யா ராய் கபூர், குனால் கேமு உள்ளிட்டோர் நடிக்கும் படம் கலன்க். இந்த படத்தின் படப்பிடிப்பு பாம்புகளால் தடைபட்டுள்ளது.
கரண் ஜோஹார் தயாரிப்பில், அபிஷேக் வர்மன் இயக்கத்தில் மாதுரி தீக்ஷித், சஞ்சய் தத் ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில் தற்போது வருண், ஆலியா, மாதுரி, குனால் ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்பின்போது அங்கு இரண்டு பெரிய பாம்புகள் வந்துள்ளன. மேலும் அந்த பாம்புகள் ஒன்றையொன்று பின்ணி பிணைந்து விளயாடியதால், சுமார் ஒரு மணிநேரம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பிறகு பின்னர் அந்த பாம்புகளை பிடித்து காட்டில் விட்டுள்ளனர்.
கரண் ஜோஹாரின் கனவு படமான இது, கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் கழித்து மாதுரியும், சஞ்சய் தத்தும் சேர்ந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கலன்க் படப்பிடிப்பு நடந்த அதே இடத்தில் முன்னதாக கரண் ஜோஹார் இயக்கிய மை நேம் இஸ் கான் படப்பிடிப்பிலும்பாம்புகளால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.