ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (06:57 IST)

முதல்மாத சம்பளத்தை கேரள நிவாரண நிதிக்கு கொடுத்த மறைந்த நர்ஸின் கணவர்

சமீபத்தில் நிபா வைரஸ் தாக்குதலினால் கேரள நர்ஸ் லினி என்பவர் பரிதாபமாக பலியானது தெரிந்ததே. இந்த நிலையில் லினியின் கணவர் தனது முதல் மாத சம்பளம் முழுவதையும் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்
 
லினியின் மறைவிற்கு பின்னர் குழந்தைகளை கவனித்து கொள்ளும் பொருட்டு துபாய் வேலையை விட்டுவிட்டு நாடு திரும்பிய லினியின் கணவருக்கு கேரள அரசு பொது சுகாதாரத்துறையில் வேலை அளித்தது
 
கடந்த மாதம் வேலையில் சேர்ந்த லினியின் கணவர், தான் வாங்கிய முதல் மாத சம்பளம் முழுவதையும் கேரளாவின் வெள்ள மீட்புப்பணிக்கு நிவாரண உதவியாக வழங்கியுள்ளார். அவருடைய இந்த செயலுக்கு சமூக வலைத்தள பயனாளிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.