செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : வியாழன், 7 ஜூன் 2018 (20:02 IST)

“இப்போது அதற்கு அவசரமில்லை” - நிக்கி கல்ரானி

‘இப்போது அதற்கு அவசரமில்லை’ என நிக்கி கல்ரானி தெரிவித்துள்ளார்.
‘டார்லிங்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிக்கி கல்ரானி. அவர் நடிப்பில் ‘கலகலப்பு 2’, ‘பக்கா’ என இரண்டு படங்கள் இந்த வருடம் ரிலீஸாகியிருக்கிறது. அத்துடன், ஜீவா ஜோடியாக ‘கீ’, பிரபுதேவா ஜோடியாக ‘சார்லி சாப்ளின் 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், ‘எந்தொரு பாக்யம்’ என்ற மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார்.
 
‘தற்போது ஹீரோயினை மையப்படுத்திய படங்கள் நிறைய வருகிறதே... நீங்கள் அந்த மாதிரியான படங்களில் எப்போது நடிக்கப் போகிறீர்கள்?’ என்று கேட்டால், “இப்போது அதற்கு அவசியமோ, அவசரமோ இல்லை. அதற்குள் ஹீரோயினை மையப்படுத்திய படங்களில் நடிப்பதற்க்கு அவசரம் ஒன்றும் இல்லை என்று தோன்றுகிறது. இன்னும் பல படங்களில் நடித்தபிறகு அதுகுறித்து யோசிக்கலாம். இப்போதைக்கு ஹீரோ - ஹீரோயினை மையப்படுத்திய படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்” என்கிறார் நிக்கி கல்ரானி.