வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (09:43 IST)

ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் தீக்குளிக்க முயற்சி - கடலூரில் பரபரப்பு

ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் தீக்குளிக்க முயற்சி - கடலூரில் பரபரப்பு
நிலத்துப் பிரச்சனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அருகே நொச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன். செங்கல்வராவ் என்பவர் தங்கபாண்டியன் வீட்டுக்கு செல்லும் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்துள்ளார். இதனால் தங்கபாண்டியன் தனது வீட்டுக்கு செல்ல முடியாமல் மனவேதனையில் இருந்துள்ளார். இதுசம்மந்தமாக தங்கபாண்டியன் பலமுறை புகார் அளித்துள்ளார். ஆனால் அதிகார வர்க்கம் எந்த நடவக்கையும் எடுக்கவில்லை.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் தீக்குளிக்க முயற்சி - கடலூரில் பரபரப்பு
இதனால் விரக்தியின் உச்சத்தில் இருந்த தங்கபாண்டியன் குடும்பத்தைச் சேர்ந்த 6 பெண்கள், 4 ஆண்கள், 8 குழந்தைகள் என 18 பேர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்துக்குச் சென்று, உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். உடனே அங்கிருந்தவர்கள் தடுத்து அவர்களை மீட்டனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து தங்கபாண்டியன் குடும்பத்தினர் அங்கிருந்து சென்றனர்.