வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 18 ஏப்ரல் 2018 (15:00 IST)

ஆசிரியை திட்டியதால் 5 மாணவிகள் தற்கொலை முயற்சி

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆசிரியை திட்டியதால் மனமுடைந்த மாணவிகள் 5 பேர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பெரும்பாடு பட்டு வளர்க்கின்றனர். அதுவும் இந்த காலக்கட்டத்தில், விற்கும் விலைவாசிக்கு, பெற்றோர் தங்களது குழந்தைகளை படிக்க வைப்பதற்கும், குடும்பத்தை பராமரிப்பதற்கும் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஆனால் இதனை சற்றும் புரிந்து கொள்ளாத சில பிள்ளைகள் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்துள்ள சுந்தரபாண்டியம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மாணவிகள் சத்தியபிரியா, அபிநயா, வைகுண்ட வாசுகி, முத்துக்கலா, கண்ணகி ஆகியோர் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி விடுமுறை நாளான நேற்று 5 மாணவிகளும் பள்ளிக்கு ஒன்றாக  சென்றுள்ளனர்.
 
இதனைக்கண்ட ஆங்கில ஆசிரியை ஆனந்தி ஜெபா கிறிஸ்டின், பள்ளி விடுமுறையின் போது ஏன் பள்ளிக்கு வந்தீர்கள் எனவும், ஆண் நண்பர்களை பார்க்க வந்தீர்களா எனவும் மாணவிகளிடம் கீழ்த்தரமாக கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவிகள் அரளி விதைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.