திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: திங்கள், 21 மே 2018 (20:55 IST)

சீமான் முன்ஜாமீன் மனு தாக்கல்! கைது பயமா?

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மதுரை ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
 
சமீபத்தில் திருச்சி விமான நிலையத்திற்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் ஒரே நேரத்தில் வந்தடைந்தனர். இவர்கள் இருவரையும் வரவேற்க திரண்டிருந்த இரு கட்சிகளின் தொண்டர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
 
இதுகுறித்து மதிமுக நிர்வாகி ஒருவர் அளித்தப் புகாரின் அடிப்படையில் சீமான் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி  நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி வினோத் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
 
இந்த நிலையில் சீமானும் இந்த வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக காவல்துறை வட்டாரங்களில் இருந்து செய்தி பரவிய நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணை இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.