1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 19 மே 2018 (14:24 IST)

வைகோ-சீமான் ஆதரவாளர்கள் மோதல் - அதிர்ச்சி வீடியோ

திருச்சி விமான நிலையத்தில் வைகோ மற்றும் சீமானின் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட வீடியோவாக வெளிவந்துள்ளது.

 
இன்று காலை, வைகோ மற்றும் சீமான் ஆகியோர் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தனர். அவர்கள் இருவரையும் வரவேற்க அவர்களின் ஆதரவாளர்கள் விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்தனர்.
 
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த வைகோ, செய்தியாளர்களிடம் பேட்டியளித்துவிட்டு காரில் புறப்பட்டு சென்றார். அப்போது, அவருக்கு ஆதரவாக வைகோ ஆதரவாளர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அங்கிருந்த சீமான் தொண்டர்களும் சீமானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர். ஒரு கட்டத்தில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதனால், இரு கட்சியினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். 
 
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்