ஒரே நாளில் மாபெரும் சாதனை படைத்த " Quit பண்ணுடா " பாடல்!

Papiksha Joseph| Last Updated: சனி, 17 அக்டோபர் 2020 (10:09 IST)

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 22 முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் தீபாவளி அல்லது பொங்கல் தினத்தில் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ’கொயட் பண்ணுடா’என்ற பாடல் மாலை 6 மணிக்கு வெளியாகியது. விக்னேஷ் சிவன் வரிகளில் உருவாகியிருந்த இப்பாடலை கேட்க மிகுந்த ஆவலுடன் காத்திருந்து விஜய் ரசிகர்கள் கொண்டாடி ட்ரெண்ட் செய்தனர்.

இந்நிலையில் இந்த பாடல் வெளியாகிய ஒரே நாளில்
1.7மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. மொழிகளை கடந்து அனைத்து தரப்பு இசை பிரியர்களாலும் விரும்ப்பட்டு ரசிகர்ளின் பேவரைட் பிளே லிஸ்டில் இடம் பெற்று
" Quit பண்ணுடா " பாடல் பிரம்மாண்ட சாதனை படைத்தது வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :