ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: புதன், 9 மே 2018 (12:58 IST)

மகன் திருமணம் - லாலு பிரசாத் யாதவிற்கு 5 நாட்கள் பரோல்

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும்  லாலுபிரசாத் யாதவிற்கு, சிறைத்துறை 5 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது.

 

முன்னாள் பீகார் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மீது சுமத்தப்பட்ட 3 மாட்டுத்தீவன வழக்குகளில் ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டு அவருக்கு 13.5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 4வது மாட்டுத்தீவன ஊழல் வழக்கிலும் லாலு குற்றவாளியென அறிவிக்கப்பட்டு  14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
 
லாலுவிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் ராஞ்சியில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலை தேறிதால், அவர் பாட்னா ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவக் கண்கானிப்பில் உள்ளார்.
இந்நிலையில் லாலுவின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான தேஜ் பிரதாப் யாதவுக்கு வரும் 12-ம் தேதி திருமணம் நடக்க உள்ளது. தன் மகனின் திருமணத்தில் பங்கேற்க,  5 நாட்கள் பரோல் கோரி லாலு குடும்பத்தினர் அம்மாநில சிறைத்துறையிடம் விண்ணப்பித்திருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட சிறைத்துறை நிர்வாகம், அவருக்கு 5 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது.