புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 8 மே 2018 (19:01 IST)

காதலரை மணந்தார் நடிகை சோனம் கபூர்!

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது காதலர் ஆனந்த் அஹுஜாவை இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.
 
டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை காதலித்து, தனது பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார் சோனம் கபூர். இவர்களது திருமணம் மும்பையில் உள்ள உறவினரின் பங்களாவில் நடைபெற்றது.
 
இந்த திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் சயீப் அலிகான், ராணி முகர்ஜி, அமீர் கான், ஜாக்குலின் பெர்னாண்டஸ், கரீனா கபூர், கத்ரனா கைப், கரண் ஜோஹர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவர்களது திருமணம் சீக்கிய முறைப்படி நடந்தது. இதைத் தொடர்ந்து இவர்களின் திருமண வரவேற்பு நிகழச்சி மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெறுகிறது.