வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 17 மார்ச் 2023 (19:14 IST)

கொடநாடு எஸ்டேட்டில் விஜய்யை விரட்டியடித்த ஜெ. - ரகசியத்தை கூறிய பிரபலம்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ளது கோடநாடு எஸ்டேட். தேயிலை தோட்டமான இதை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 1992 ஆம் ஆண்டு ரூபாய் 17 கோடிக்கு வாங்கினார். இதில் பிரம்மாண்ட பங்களா, உலங்கு வானூர்தி தளம், படகு குழாம், தேயிலைத் தொழிற்சாலை, தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க பேட்டரி கார்கள் போன்றவை உள்ளன.
 
ஜெயலலிதா இங்கு பல முறை தங்கி ஓய்வு எடுத்துள்ளார். இங்கு சாமானிய மக்கள் உள்ளே நுழையாத வகையில் 11 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.  பங்களா வெளியில் இருந்து பார்க்க முடியாதவாறு கட்டப்பட்டது.
 
இதில் ஜெயலலிதாவுடன் அரசியல் சார்த்த ரகசிய திட்டங்கள் பல முடிவெடுக்க அரசியவாதிகள் சந்திக்கும் இடமாகவும் இருந்தது. இங்கு நடிகர் விஜய் ஒருமுறை ஜெயலலிதாவை சந்திக்க அப்பாய்மெண்ட் இல்லாமல் செல்லலாம் என்று நினைத்து சென்றிருக்கிறார்.
 
தகவல் அறிந்த ஜெயலலிதா அவர் ஓன்னும் அவ்ளோவ் பெரிய ஆள் இல்ல அப்பாய்மெண்ட் இல்லாமல் சந்திக்க மாட்டேன். வெளியில் அனுப்புங்க என்று கூறியுள்ளார்.உடனே அங்கிருந்த நேபாளி கூர்காவால் விரட்டியடிக்கப்பட்டாராம் விஜய். ரூ.100 கோடி வாங்கும் விஜய்யை 15 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஜெயலலிதா விரட்டுத்தடிக்கப்பட்டார் என தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.