வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 15 மார்ச் 2023 (15:35 IST)

அருண்விஜய் நடிக்கும் புதிய படத்தின் லேட்டஸ்ட் போஸ்டர்!

பல வருடங்களாக போராடி வந்த அருண் விஜய்க்கு தடையற தாக்க மற்றும் தடம் போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து இப்போது முன்னணி நடிகராகியுள்ளார்.இதையடுத்து அவர் இப்போது இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஒரு புதுப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் இங்கிலாந்தில் பெரும்பகுதி நடந்தது. அருண் விஜய், ஏமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் நடிக்கும் இந்த படத்துக்கு ‘அச்சம் என்பது இல்லையே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அருண் விஜய், அருகில் ஒரு சிறுமியோடு நிற்கும் புதிய போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.