ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 15 மார்ச் 2023 (17:26 IST)

ரூபாய் நோட்டுகளை ஓடும் காரிலிருந்து வீசிய யூடியூபர்கள் கைது

பார்ஸி இணைய தொடரில் வந்தது போல்  ஓடும் காரிலிருந்து ரூபாய் நோட்டுகளை வாரி இறைத்த யூடியூபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஷாகித் கபூர், விஜய்சேதிபதி நடிப்பில், ராஜ் அண்ட் டிகே இயக்கத்தில் வெளியான பார்ஸி வெப் தொடரில், பணத்தாள்களை வாரி இறைப்பதுபோல் ஒரு காட்சி வரும். இதேமாதிரி  செய்ய வேண்டுமென நினைத்து பணத்தை வாரி இறைத்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரியானா மா நீலம் குருகிராம் நகரில் சென்றுகொண்டிருந்த ஒரு காரில் இருந்து இளைஞர் ஒருவர் ரூபாய் நோட்டுகளை வாரி இறைத்தார். இதுகுறித்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.

அதேபோல், இன்னொரு இளைஞரும் பணத்தை சாலையில் வாரி இறைத்தார்.  இதுகுறித்து,  அம்மாநில போலீஸார் வழக்குப் பதிவு விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர்களான ஜோராவர் சிங், குர்ப்ரீத் சிங் ஆகிய இருவரைம் இன்று போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

கடந்த மாதம் 10 ஆம் தேதி கோல்ஃப் மைதான சாலையில்  காரில் செல்லும்போது இந்தச் செயலில் ஈடுபட்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளனர்.