வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 15 மார்ச் 2023 (08:26 IST)

மீண்டும் கம்பேக் கொடுக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.. கைகொடுக்கும் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான படங்களை தயாரித்து ஹிட்களைக் கொடுத்தவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஆனால் கடைசியாக அவர் தயாரித்த ஐ திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதற்கிடையில் ஷங்கருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் இடையில் அந்நியன் ரீமேக் சம்மந்தமாக மோதல் எழுந்தது. இதனால் சில ஆண்டுகளாக படம் தயாரிக்காமல் இருந்த  ஆஸ்கர் ரவிச்சந்திரன், தன்னுடைய கடன்களை எல்லாம் அடைத்துவிட்டு, அடுத்த ஆண்டில் கம்பேக் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.