ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : திங்கள், 17 செப்டம்பர் 2018 (20:07 IST)

தெலங்கானாவில் கூலிப்படை வைத்து மருமகனைக் கொன்ற மாமனார்

அம்ருதா உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த பினராயின் பெற்றோர் அவர்களின் திருமணத்தை எதிர்த்துள்ளனர். ஆனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி  இருவரும்  திருமணம் செய்து கொண்டனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.  

பினராய்- அம்ருதா ஆகிய இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர்  காதல் திருமணம் செய்து கொண்டனர். இப்போது அம்ருதா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில்,அவரது கணவரான  பினராய்  அம்ருதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இருவரும் மருத்துவமனை வாசலில் சென்றபோது அவர்களை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவன், பினராயின் தலையில் இரும்புகம்பியால் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.  தன் கண்ணெதிரிலேயே தனது கணவன் தாக்கப்பட்டு சரிந்து விழுவதை அறிந்த அவரது மனைவி என்ன செய்வதென தெரியாமல் நின்றிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து பினராயி மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்த போது , அம்ருதா உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த  பினராயி பெற்றோரின் எதிர்ப்பை மீறி அவர்கள் இருவரும்  திருமணம் செய்து கொண்டனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதனால் கோபமுற்ற அம்ருதாவின் அப்பா ஒரு கோடி ரூபாய் கொடுத்து கூலிப்படை மூலம் தன் மகனை கொலை செய்துள்ளார் என பினராயின் பெற்றோர் புகார் செய்துள்ளனர்.

புகாரை அடுத்து போலீஸார் கொலை செய்த குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில் மருத்துவமனைக்கு வெளியே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு  கூலிப்படையைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.