திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 18 ஜூலை 2018 (09:22 IST)

நண்பணின் அம்மா குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபன் - குத்திக் கொலை செய்த நண்பன்

நண்பனின் அம்மா குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபரை அவரது நண்பன் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் சந்தா நகரை சேர்ந்தவர் அஜய். இவரும் சம்பத் என்ற நபரும் சிறு வதிலிருந்தே நண்பர்கள். இதனால் சம்பத் வீட்டிற்கு அஜய் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
 
ஒரு சமயம் சம்பத் வீட்டில் இல்லாத நேரத்தில், அவரது வீட்டிற்கு வந்த அஜய், சம்பத்தின் அம்மா குளிப்பதை கதவின் ஓட்டை வழியாக பார்த்துள்ளார். பார்த்ததுமின்றி அதனை வீடியோவாக எடுத்துள்ளார்.
 
இதனையறிந்த சம்பத், கடும் கோபமடைந்து அஜய்யை கொல்ல திட்டமிட்டுள்ளார். பின் சம்பத் அஜய்யை குடிக்க கூப்பிட்டுள்ளார். இருவரும் மது வாங்கி குடித்துள்ளனர். அப்போது சம்பத் அஜய்யை அளவுக்கு அதிகமாக குடிக்க வைத்துள்ளார்.
 
பின் தன் அம்மாவை ஏன் இப்படி ஆபாசமாக படமெடுத்தாய் என கேட்டுள்ளார் சம்பத். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஜய்யை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அஜய்யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸார் சம்பத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.