1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
  4. Deepika Padukone - Ranveer Singh married in November

நவம்பரில் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம்!

தீபிகா படுகோனே
பாலிவுட்டின் நட்சத்திர காதல் ஜோடிகளான தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் திருமணம் நவம்பரில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்  திரையுலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்கள் இவ்வாண்டு இறுதிக்கு இருவரும் திருமணம் செய்துக்கொள்ளலாம் என தகவல் வெளியானது. இருவீட்டாரும் திருமண வேலைகளில்  ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இப்போது தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் ஜோடிக்கு நவம்பரில் திருமணம் நடக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோன், ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொள்ளும் தேதியை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

திருமண அழைப்பிதழ் வடிவில் அவர் வெளியிட்டுள்ள தகவலில் ‘எங்கள் குடும்பாத்தாருடன் ஆசிகளுடன் எங்கள் திருமணம் நவம்பர் 14,15 தேதிகளில் நடைபெறும் என்பதை  தெரிவித்து கொள்கிறேன். இத்தனை காலமாக எங்கள்மீது நீங்கள் தொடர்ந்து காட்டிவரும் அன்புக்கு நன்றி தெரிவிப்பதுடன், இந்த வாழ்க்கை தொடங்கப்போகும் எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்’ இவ்வாறு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
About Writer
VM
அடுத்த கட்டுரையில்
மீ டூ விவகாரம்: அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்