பெட்ரோல் விலையை குறைக்க முடியாது, வேணும்னா நீங்க வீட்டு செலவ குறைச்சுக்குங்க - பாஜக அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு

BJP
Last Updated: செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (07:57 IST)
பெட்ரோல் விலையை சமாளிக்க மக்கள் தங்களது வீட்டு செலவை குறைத்துக் கொள்ள வேண்டுமென பாஜக அமைச்சர் கூறியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. 
 
பல இடங்களில் ஹோட்டல்களில் உணவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோக்கள், கால் டேக்ஸிகளின் வாடகையும் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
 
இதற்கு எதிர்கட்சிகள் உள்பட பலரும் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
ஆனால் மத்திய அரசு அப்போது முதல் இன்று வரை உலக சந்தைகளில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வே காரணம் என்று சாக்கு சொல்லி வருகிறது. 
hike
இந்நிலையில் இதுகுறித்து பேசிய ராஜஸ்தான் மாநில பாஜக அமைச்சர் ராஜ்குமார் ரின்வா, பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பதால், அவற்றின் விலை உயர்கிறது. பெட்ரோல் விலையுர்வை சமாளிக்க, மக்கள் தங்களது வீட்டு செலவுகளை குறைக்க வேண்டுமென அவர் பொறுப்பற்று பேசியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :