புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 10 செப்டம்பர் 2018 (10:29 IST)

முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தியதால் தான் தேர்தலில் தோல்வி - பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

தேர்தலில் முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தியதால் தான் தோல்வியடைந்துவிட்டதாக பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் கூறியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஏடாகுடமான கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்குவதை பாஜக நிர்வாகிகளின் ஃபுல் டைம் வேலையாகவே செய்து வருகின்றனர்.
 
மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. பல இடங்களில் பாஜக வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த மாஹித்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வான பகதூர் சிங் இந்த தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததற்கு காரணம் அதிகளவில் முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தியதே என கூறியுள்ளார். ஒரு எம்.எல்.ஏவே இப்படி பொறுப்பற்று பேசியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.